பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

கலைவாணன்

102 கலைவாணன்

வில்லை. அவர் மகா உத்தமர். கனவிலும் பிறருக்குத் தீங்கிழைக்கக் கருதாத அவரைச் சிறையில் வைத் திருப்பதுதான்் நம்நாட்டு மக்களுக்கு அதிருப்தியே தவிர; அவரை விடுதலை செய்தால் யாருக்கும் அதிருப்தி உண்டாகாது. மேலும் அவர் விடுதலையால் பட்ட மகிஷியும் மகிழ்ச்சியடைவார்கள்.

குலோத்:- ஆம்; நீங்கள் சொல்வதுதான்் சரி! இதோ என் கணையாழி! இதைச் சிறைக்காவலரிடம் காட்டி, நமது உத்தரவென்று சொல்லி புகழேந்திப் புலவரை விடுதலை செய்து, தக்க மரியாதையுடன் சிவிகையில் இங்கு அழைத்து வாருங்கள்.

(கணையாழியை உதயணரிடம் கொடுக்கிறான்.)

உதயனர்:- உத்தரவு! (வணங்கிச் செல்லுகிறார்.)

கூத்தர்:- மன்னா! தங்கள் செய்கையின் மர்மம் எனக் கொன்றும் விளங்கவில்லை. இதைவிட நீர் என்னையே சிறையிட்டு விட்டோ அல்லது நாடு கடத்திவிட்டோ புகழேந்தியை விடுதலை செய்திருந்தால் நன்றாயிருந் திருக்கும்.

குலோத்:- புலவரே மன்னிக்க வேண்டும். குணவதியின் ஊடலைத் தவிர்க்க வேறு வழியில்லை. இந்தத் தர்ம சங்கடத்திற்கிடையே நான் வேறு என்ன செய்ய முடியும்?

கூத்தர்:- அதற்காக நம் வைராக்கியத்திலிருந்து தவறி விடுவதா? பலர் முன் பல முறை தங்களையும் என்னையும் அவமதித்துப் பேசிய புகழேந்தியை இந்த அற்ப காரணத்திற்காக விடுதலை செய்தால்-கண்டவர் நம்மை நகைக்க மாட்டார்களா?