பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

கலைவாணன்

104 கலைவாணன்

புகழேந்தி:- (வணங்கிய அரசனைப் பரிந்து தழுவி) வேந்தே! இதென்ன விளையாட்டு: யாரை யார் மன்னிப்பது? மனினை மனிதன் தண்டிப்பதும், மன்னிப்பதும், மண் வீடு கட்டி விளையாடும் சிறுவர்களின் விளையாட்டைப் போன்றது. நம் அனைவரையுமே மன்னிக்கவும் ரகழிக்கவும் இறைவன் ஒருவன் இருக்கிறான்.

குலோத்:- ஆம்; என் மனோசாந்திக்காகவேனும், என்னை மன்னித்தேனென்று தாங்கள் ஒரு வார்த்தை சொல்லா விடில்......! -

புகழேந்தி:- கடவுள் தங்களை மன்னிப்பார். வேந்தே! திடீரென்று என்னை விடுதலை செய்து இங்கு அழைத்துவரக் காரணம்?

குலோத்:- காரணம்! உதயணர் சொல்லவில்லையா?

புகழேந்தி:- இல்லை. என்னை விடுவித்து சீக்கிரம் அழைத்து

வரவேண்டுமென்பது தங்கள் கட்டளையென்றும், வேறொன்றும் தமக்குத் தெரியாதென்றும் சொன்னார்.

கூத்தர்:- (தனக்குள்) உம்...எல்லாம் கபட நாடகம்.

புகழேந்தி:- (கூத்தரைத் திரும்பிப் பார்த்து) யார்? கூத்தரா! வணக்கம். வணக்கம். இதுவரை நான் கவனிக்கவில்லை. மன்னிக்க வேண்டும்.

கூத்தர்:- பரவாயில்லை.

குலோத்:- மகாராணிக்கு இன்று அளவற்ற கோபம் வந்து விட்டது. எதற்காக யார்மேல் என்ற விவரமொன்றும்

தெரியவில்லை. அந்தப்புரக் கதவனைத்தும் அடை பட்டிருக்கிறது. அழைத்தாலும் பதிலில்லை,