பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைவாணன்

105


புகழேந்தி:- ஆச்சரியம்தான்். உ.ம். (சற்று மெளனம்) ஏன் நமது கூத்தரைக் கொண்டு அரசியின் கோபத்தைத் தணிக்க.........o குலோத்:- எல்லாம் ஆயிற்று. ஒன்றும் பயனில்லை. இனி தங்களால் தான்் குணவதியின் கோபத்தைத் தவிர்க்க முடியும். புகழேந்தி:- கூத்தராலேயே முடியாத காரியம் என்னால்

எப்படி முடியும்? குலோத்:- குணவதியின் விஷயத்தில் அப்படி நினைப்பதற் கில்லை. ஏனெனில் அவள் உங்கள் மாணவி என்பதோடு மட்டுமின்றி அபிமானப் புத்திரியாகவும் இருப்பதால் அவசியம் உங்கள் சொல்லைத் தட்டமாட்டாள். பாம்பின் கால் பாம்புக்குத்தான்் தெரியும். அவள் மனோநிலையை உங்களால்தான்் அறிய முடியும். புகழேந்தி:- குணவதிக்கும் எனக்கும் உள்ள தொடர்பையும் அன்பையும் இப்போதாவது நீங்கள் உணர்கிறீர்களே! அதுவே போதும்.உ.ம்...ஏதோ...! அதையும் சோதித்துப் பார்ப்போம்.

(கதவருகிற் சென்று பாடுகிறார்.) "இழையொன்றிரண்டு வகிர்செய்த நுண்ணிடை ஏந்தியபொற் குழையொன்றிரண்டு விழியணங்கே! கொண்டகோபந்தணி மழையொன்றிரண்டு.கைம் மானாபரணன்கின் வாசல்வந்தால் பிழையொன்றிரண்டு பொறாரோ குடியிற் பிறந்தவரே." (குணவதி கதவைத் திறந்து வந்து புகழேந்தியை வணங்கு கிறாள்.) குணவதி:- புலவர் நாயகமே! வணக்கம்; வாருங்கள். ஏன்

நிற்கவேண்டும்? இதோ இந்த ஆசனத்தில் அமருங்கள். புகழேந்தி:- குணவதி! உன் அன்புக்கு மகிழ்ச்சி. நான்

அமருவதிருக்கட்டும். உன் வாழ்க்கைத் துணைவன்