பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

கலைவாணன்


இந்நாட்டின் தலைவன், சோழர் குலத்தின் சுடரொளி, படைமுகமெங்கணும் பகைவர்கள் நடுங்கப் போர் புரிந்து வெற்றி விருதுகளின் கொற்றம் துலங்கச் சீரரசு செலுத்தும் உன் அன்பிற்குரிய நாயகன், உனது கருணாகடாட்சத்துக்காகக் காத்திருக்கக் கண்டும் காணாதவள் போல் இருப்பது, உன்போன்ற உயர்குடிப் பிறந்த மங்கையர்களுக்கு அழகல்ல முதலில் உன் மணாளனை அமரச் செய்.

குணவதி:- ஐயனே! அதைப்பற்றிப் பிறகு யோசிக்கலாம்.

தாங்கள் அமருங்கள்.

புகழேந்தி: குணவதி உனக்கும், உன் நாட்டிற்கும் உன் நாட்டு மக்களுக்கும், இரவலர்களுக்கும், புலவர்களுக்கும். தற்போது எனக்கும் நாயகனாகிய சோழ மன்னனும்: சோழ நாட்டின் அரசவைப் புலவராகிய கூத்தரும் உன் வாசல் வந்து கால்கடுக்கக் காத்திருக்கக் கண்டும், அவர் களைக் கெளரவிக்காமல் என்னை மட்டும் அமரச் சொல்வது நியாயமா? பெண்கள் பொறுமையின் வடிவங்களாகும். உன் நாயகன் ஒன்றிரண்டு குற்ற மிழைத்திருந்தாலும் அதைப் பொறுப்பதுதான்் உத்தமப் பெண்களின் கடன்.

குணவதி:- என் நாயகன் எனக்கு ஏதாவது குற்றமிழைத்திருந் தாலல்லவா? அப்படியொன்றும் இதுவரை நேர்ந்ததே இல்லையே?

புகழேந்தி:- பின்பு உனக்கு அரசரின்மேல் கோபம்வரக்

காரணமென்ன?

குணவதி. அரசர் தங்கள் விஷயத்தில் இழைத்த தவறை