பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைவாணன்

107


புகழேந்தி:- குணவதி என் பொருட்டாகவா உனக்கு மன்னரிடம் இத்தனை கோபம்? இது அறியாமை. அரசன் நாட்டின் நன்மை தீமைகளைக் குறித்து இத்தகைய காரியங்கள் அநேகம் செய்ய நேரிடலாம். இதற்கெல்லாம் நீ கோ பி க் க லா மா? மேலும் தண்டனையை ஏற்றுக்கொண்ட நானே மன்னருடன் மகிழ்ச்சியோடு நேசமாய் இருக்கும் போது, எனக்காக நீ வருந்துவது நியாயமா? குலோத்:- பிறர் குற்றத்தைப் பொறுப்பதுதான்் தங்களைப் போன்ற பெரியோர்களின் குணம். தங்களுக்கு நான் உண்மையிலேயே மன்னிக்கக் கூடாத பெருந் தவறிழைத்து விட்டேன். ஆனால், இப்போது அதை நினைந்து வருந்துகிறேன்.வெட்கமடைகிறேன். குணவதி இன்று என் அறிவுக் கண்களைத் திறந்தாள். குணவதி யின் ஊடலே இன்று எனக்கு ஒர் ஒப்பற்ற உத்தமரின் தோழமையை உண்டாக்கியது. புகழேந்:- எல்லாம் நன்மைக்கே. சென்றதைச் சிந்தித்து வருந்துவதிற் பயனில்லை. வாருங்கள். எல்லோரும் அமருவோம். குலோத்:- அமருவதற்கு இன்னும் மகாராணியின் தயவு

பிறக்கவில்லையே! குணவதி:- மகாராணியின் விருப்பம் எதுவோ அது நிறைவேறி விட்டது. இனி எப்போதும்போல் குணவதி உங்கள் அடிமைதான்். குலோத்:- அப்பா! இந்தப் பெண்களே பொல்லாதவர்கள்.

நினைத்ததை முடித்தே தீருவார்கள்.

(எல்லோரும் அமருகிறார்கள்.) கூத்தர். அதற்கு அனுசரணையாக உதயணரைப் போல் ஒரு

ஆள் இருந்தால் நினைத்த காரியம் ஏன் முடியாது?