பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

கலைவாணன்

[08 கலைவாணன்

குணவதி:- ஆமாம். ஆனால் அவர் அனுசரணையால் புலவர் களைச் சிறையிடவோ, பலியிடவோ முடியாது. இத்த கைய நல்ல காரியங்களுக்குத்தான்் அவர் பாடுபடுவார். புகழேந்தி:- இதென்ன பேதமை பெரியோர்கள் மனம்நோக இப்படியெல்லாம் பேசலாமா? அவர் என்னைச் சிறையிடாதிருந்திருந்தால் இத்தனை தமிழ்ப் புல்வர் களின் நட்பும் எனக்குக் கிடைத்திருக்குமா? சிறைக் கூடமா அது? இல்லை இல்லை, கலைக்கூடமாகவே திகழ்ந்தது எனக்கு. ஆஹா அங்கு நான் கண்ட இன்பக் காட்சிகளையும், சிந்தனைச் சிற்பங்களையும் இன்ப நினைவுகளையும் என்றைக்கும் மறக்க முடியுமா? ஆஹா! அமைதி இன்பத்தையும் அறிவின் ஆராய்ச்சித் திறத்தையும், அருந்தமிழ்த் திறத்தையும், அன்பின் பெருமையையும், நான் அங்கல்லவா பூரணமாகக் கண்டேன்?-கள்ளம், கபடம், சூது, காமம் முதலிய துர்க்குணமுள்ளவர்களுக்குத்தான்் சிறை ஒரு நரகம் போலும். என் வரை சிறைவாழ்க்கை ஸ்வர்க்க வாழ்க்கையாகவே திகழ்ந்தது. குலோத். நன்மையாயினும் தீமையாயினும் நடந்தவற்றை யெல்லாம் மறந்து, புலவர் மணிகளாகிய நீங்கள் இருவரும் நட்பினர்களாயிருந்து எனக்கும் என் நாட்டு மக்களுக்கும் அறிவுரை பலவும் கவிதை, காவியம், இலக்கியம் முதலிய தமிழ்ச் சுவையமுதும் ஊட்டி மகிழ்விக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளுகிறேன். இம்மகிழ்ச்சியின் அறி கு றி யாக நாளை வசந்த மாளிகையில் ஒரு சிறு விருந்தளிக்க ஏற்பாடு செய்ய நினைக்கிறேன். அதில் நீங்கள் இருவரும் மகிழ்ச்சியோடு கலந்து கொள்ள வேண்டும். இரு புலவர்களும்:- ஆஹா அப்படியே!

(திரை)