பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-20

இடம்: முரணை நகர் அரண்மனை தர்பார். காலம்: பகல்

(சந்திரன், அமைச்சர், புலவர்கள் முதலானவர்களுடன் வீற்றிருக்கிறான். சபையோரின் குதுகலக் கரகோஷ சிரக்கம்பங்களுக்கு இடையே நாட்டியம் நடைபெற்று முடிகிறது.) . ஒரு புலவர்:- நடனம் வெகு அற்புதமாக இருந்தது இன்று, ஆனால் அரசரின் மனம் நட்னத்தில் லயிக்கவே இல்லை. அமைச்சர்:- ஆம். நானும் கவனித்தேன். இன்றுமட்டுமல்ல'

சில நாட்களாகவே அரசர் ஆழ்ந்த சிந்தனையில்......? சந்திரன்:- உண்மைதான்். மனிதன் வாழ்நாளெல்லர்ம் இத்தகைய கேளிக்கைகளால் அடையும் சிற்றின்பங் களிலேயே மூழ்கித் திருப்தியடைந்து வாழ்வை முடித்துக் கொள்ளுகிறான். அத்துடன் அவனையே மறந்து விடுகிறது. மனிதன் முயற்சியால் முடியாத காரியம் எதுவுமில்லை. முயற்சியும் அறிவுத் திறனும் மனோவலி யும் உள்ளவர்கள் செய்யும் அரிய காரியங்களால் இறந்தும் இறவாதவராய் புகழுடம்புடன் உலகில் எத்தனை பேர் வாழுகிறார்கள்?

புலவர்:- ஆம்

‘'தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலிற்றோன்றாமை நன்று'

என்பது வள்ளுவரின் மறையல்லவா?

சந்திரன்:- என் ஆசையும் அதுதான்். என் வாழ் நாளைக்குள் மக்கள் அனைவருக்கும் நன்மை பயக்கக் கூடியதும்