பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

கலைவாணன்

110 கலைவாணன்

உலகம் உள்ளவரை அழியாததுமாகிய ஓர் அரிய காரியத்தைச் செய்யவேண்டும். இதற்குத் தக்க யோசனை கூறுவோருக்கு ஆயிரம் பொற்காசுகள் வெகுமதியளிக்கத் தீர்மானித்துள்ளேன்.

அமைச்சர்:- சிறந்ததோர் கலாசாலை யமைத்து அரிய கலைகள் அனைத்தையும் பயிற்றுவிக்க ஏற்பாடு செய்தால்......!

சந்திரன்:- (திருப்தியற்றவராய் தலையை அசைக்கிறார்.)

சேனாதிபதி:- நம்மிலும் சிறந்த ஒரு பெரிய வல்லரசின் மீது படையெடுத்து வீரப்போரியற்றி வெற்றி

கண்டால்......... !

சந்திரன்:- போரில் ஜெயாபஜெயம் ஒருவர் பங்கல்ல. மேலும் நம்மைப் பகைக்காமல் இருக்கும்போது வலுவில் நாமாக அதர்ம யுத்தம் தொடுத்து அதன் காரணத்தால் நிரபராதிகளாகிய கோடிக்கணக்கான பொதுமக்களின் உயிரை வதைப்பதென்பது பேராசைப் பேய்பிடித்த கொடுங்கோலர்களின் செய்கையாகும்.

ஒரு அந்தணர்:- ஒரு பெரிய அன்னசத்திரம் கட்டி ஏராளமான மான்யம்விட்டுப் பிராமணர்களுக்கு அன்னதான்ம், வஸ்திரதான்ம், கோதான்ம் முதலிய தான்ங்கள் வழங்கினால் தங்களை இகத்திலும் பரத்திலும் வாழ்த்துவார்கள். சாஸ்திரங்கள்கூட......

சந்திரன்:- போதும். போதும். போதும். நாட்டில் இப்போ திருக்கும் சோம்பேறிக் கூட்டமும், காஷாயப் போலி வேடதாரிகளும் போதும். இன்னமும் இத்தகைய கூட்டத்தை உற்பத்தி செய்யும் கைங்கர்யத்தில் நாம் இறங்கவேண்டாம்.