பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைவாணன்

111


ஒரு புலவர்: அரசே! இவையெல்லாவற்றையும் விடத் தற்போதுள்ள சிறந்த புலவர்களில் ஒருவரைக் கொண்டு உயர்ந்ததோர் இலக்கிய நூலோ அல்லது காவியமோ இயற்றினால், உலகமக்களின் அறிவு வளர்ச்சிக்கும், உலகுள்ளவரை தங்கள் பெயரும் நூலாசிரியர் பெயரும் நிலைத்திருக்குமல்லவா!

சந்திரன்:- ஆம்; இது நல்ல யோசனை! தற்போது தமிழ் நாட்டுக்கு இதைவிட நம்மால் செய்யத் தகுந்த தொண்டு ஒன்றும் இருக்க முடியாது. ஆனால் ..! அதற்குத் தகுந்த புலவரைத் தேடிப்பிடிப்பதென்பது..?

புலவர்: அரசே! தாங்கள் நினைத்தால் வெகு சீக்கிரத்தில்

முடியும்.

சந்திரன்:- உண்மையாகவா? புலவரே! அதற்காக எத்தனை பொருள் செலவாயினும் சரி. இன்று முதலே அம்முயற்சி யில் பூரணமாக இறங்கத்தயார். தகுந்த புலவர் எங்குள்ளார்? தெரிவியுங்கள்.

புலவர்:- புகழேந்திப் புலவரைப் பற்றித் தாங்கள்

கேள்விப்பட்டிருக்கிறீர்களல்லவா?

சந்திரன்:- ஆம்; கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவர் மதுரையின் ஆஸ்தான்ப் புலவராய் இருந்து அவரால் அவர் குமாரிக்குக் கெளரவச் சீதனமாய் சோழநாட்டுக்கு அனுப்பப் பெற்ற தாகவல்லவோ கேள்வி. -

புலவர்:- ஆமாம். ஆனால் சோழ மன்னன் குலோத்துங்கன் அவர் பெருமையறியாமல், தன் சமஸ்தான்ப் புலவராகிய ஒட்டக்கூத்தரின் சொல்லை நம்பிப் புகழேந்திப் புலவரைச் சிறையிட்டு வைத்திருந்து, அந்நாட்டு அரசியின் பெரு முயற்சியால் விடுதலை யடைந்திருக்