பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

கலைவாணன்

112 கலைவாணன்

கிறார். அரசனும் புலவருக்கு அறியாமையால் இழைத்த கொடுமைக்கு வருந்தித் தற்போது மிக்க மரியாதை யோடு ஆதரித்து வருகிறார்.

சந்திரன்:- ஆம். புலவர்களே அவர் பெருமையை வியந்து கூறப் பலமுறை கேட்டிருக்கிறேன். அவரையா சோழன் சிறையிட்டு வருத்தினான்? என்ன அநியாயம்!...உம், உலகம் உள்ளவரை நீங்காத பழிச்சொல்லை யல்லவா தேடிக்கொண்டான் சோழன்?

புலவர்:- சந்தேகமென்ன! அவர் புலமைத் திறத்தைப் புலவர்களே புகழ்ந்து புகழேந்தியென்ற சிறப்புப் பெயரளிக்கப் பெற்ற அவரைச் சிறையிட்ட கொடு மையை உலகம் எப்படி மறக்கும்? -

சந்திரன். மறக்காதுதான்். உ.ம்... அதிருக்கட்டும். புலவரே! அவரை இங்கு எப்படியாவது அழைத்துவர வேண்டுமே! அதற்குவழி?

புலவர்:- சோழனுக்கும் புலவருக்கும் தனித்தனியே தாங்களே இரண்டு ஒலையெழுதித் தக்க தூதுவர் மூலம் அனுப் பினால் ........!

சந்திரன்: அது எப்படி முடியும்? தன் தவறை உணர்ந்து அதற்குப் பிராயச்சித்தமாக அளவற்ற அன்புடன் நடத்தும் சோழன் தற்போது அவரை அனுப்பச் சம்மதிப்பானா? அல்லது முன்பின் அறியாத புலவர்தான்் நம் அழைப்புக்கு இணங்குவாரா?

புலவர்: அரசே! அவருக்குத் தெரிந்தவர் தெரியாதவர் என்ற வித்தியாசமே கிடையாது. அன்புடன் அழைக்கும் எவர் வேண்டுகோளையும் புறக்கணிக்கமாட்டார். அந்தச் சந்தேகமே தங்களுக்கு வேண்டாம். வேண்டு