பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-21.

இடம்:- வசந்தமாளிகை காலம்:- பகல். (குலோத்துங்கன், புகழேந்தி, சுத்தர், உதயணர், முரணை நகர்ப்புலவர், காவலர்.)

குலோத்து:- புலவரே என்ன யோசனை? சிந்தனை

பலமாயிருக்கிறதே!

புகழேந்தி:- ஒன்றுமில்லை. சில நாட்களாகவே என்மனத்தில்

ஒரு எண்ணம் உண்டு. அதைச் சொன்னால்...!...

குலோத்து:- சொன்னால் நிறைவேற்றுவேனா என்ற சந்தேகமா? புலவரே! தங்கள் மனக்குறை எது வானாலும் நிறைவேற்றி வைப்பேன். தங்கள் விருப்ப மென்ன? சொல்லுங்கள்.

புகழேந்தி:- அரசே! இதென்ன இப்படிக் கேட்கிறீர்கள். ரசிகமணியாகிய தங்கள் ஆதரவும், கலைக்கடலாகிய கூத்தரின் தோழமையும், அன்பு கொண்டு நேசிக்கும் குணவதியின் கருணையும் இருக்கும் வரை எனக்கேது மனக்குறை?...உ.ம்... வேறொன்றுமில்லை; புலவர்கள் இயற்கையிலேயே ஊர் சுற்றுவதில் விருப்பம் உள்ளவர்க ளென்பது தாங்கள் அறியாததா என்ன! அப்படி கொஞ்ச நாளைக்கு-வெளியூர்கள் போய் வரலாமா என்று சிந்தனை. அதற்குத்...த.ா...ன் தங்கள்......... !

குலோத்து:- புலவரே! தங்களின் பெருமையறியாது சிறையிட்டு வருத்திய காலத்திலெல்லாம் பொறுமை யோடு அனைத்தையும் பொறுத்திருந்த தாங்கள், என் தவறை நானே உணர்ந்து வருந்தி என்னுயிரினும்