பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைவாணன்

115


மேலாக நேசிக்கும்போது என்னை நீங்கிப் பிரிந்துபோக நினைப்பது தர்மமா?

(ஒரு காவலன் வந்து வணங்குகிறான்.) சேவகன்:- அரசே! முரணை நகரிலிருந்து ஒரு புலவரும் சில வீரர்களும் தங்களைக் காண வந்திருக்கிறார்கள். குலோத்து:- சரி, நீ போய் அவர்களை உடனே தக்க

மரியாதையுடன் இங்கு அழைத்துவா.

(காவலன் வணங்கிச் செல்கிறான்.) முரணை நகரிலிருந்து......! என்ன காரணமாயிருக்கும்? உதயணர்:- உடன் வீரர்களும் வந்திருப்பதால், அரசரே

அனுப்பியிருக்கலாம். - கூத்தர்:- எல்லாம் சற்று நேரத்தில் தெரிந்துவிடுகிறது. (புலவரும் வீரர்களும் வந்து வணங்குகின்றர்கள்.) புலவரும் வீரரும்:- அரசே வணக்கம்.

குலோத்து:- வணக்கம். வாருங்கள்; வாருங்கள்; அதோ அப்படி அமருங்கள்-உம்.-தாங்கள் முரணை நகரி லிருந்து வந்த புலவரோ?

புலவர்:- ஆம். எம் அரசர் தங்களுக்கும் புகழேந்திப் புலவ ருக்கும் இரு ஒலைச்சுருள்கள் கொடுத்து அனுப்பி

யுள்ளார்.

(ஒலைச்சுருளைக் கொடுக்க, குலோத்துங்கன்

வாங்குகிறான்.) குலோத்து:- அப்படியா! மிக்க மகிழ்ச்சி...... ! உம். தங்கள்

பெயர்...?

புலவர்:- என்னைக் குணசீலர் என்றழைப்பார்கள். இவ்வீரர்

களை வழித்துணைக்காக உடன் அனுப்பி வைத்தார். குலோத்து :- உங்கள் அரசரும் அரசியும் மற்றும் குடிமக்கள்

அனைவரும் நலம்தான்ே?