பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

கலைவாணன்

T 16 கலைவாணன்

புலவர்:- ஆம்; எல்லோரும் நலமே. குலோத்து:- (ஒலையை உதயணரிடம் கொடுத்து)

உதயணரே, இதைப் படியுங்கள்.

(உதயணர் ஒலையைப் படிக்கிறார்.) "எங்கள் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய சோழ மண்டலாதிபதி திருவுயர் குலோத்துங்கச் சோழர் மன்னர் சமூகத்திற்கு முரணை நகர் மன்னன் வணக்கமாய் எழுதிக் கொள்ளும் அஞ்சல்.

இங்கு நானும் என் குடிமக்களும் நலம். தாங்களும் தங்கள் நாட்டு மக்கள் யாவரும் நலம் பல பெற்று வாழ இறைவனை வழுத்துகின்றேன்.

எல்லையற்றதும் இனிமை நிறைந்ததுமாகிய தமிழ்க் கலையில் தங்களுக்குற்ற ஆர்வத்தையும், எப்பொழுதும் நற்புலவர்கள் பலர் இணைபிரியாது அருகிருந்து இடை விடாது கார்மேகம் போல் வருவிக்கும் இலக்கிய இசை இன்பத்தில் திளைத்துத் தாங்கள் தமிழை வளர்க்கும் முறையையும் கண்டு அளவிலா மகிழ்ச்சியடைகிறேன். தமிழ் நாட்டின் ஒப்பற்ற கலைச் சிகரங்களாக விளங்கும் புகழேந்திப் புலவரையும், ஒட்டக்கூத்தரையும் நண்பர் களாக அடையப்பெற்ற தங்களைப் போன்ற பாக்கிய சாலிகள் உலகில் வேறு யாருமே இருக்க முடியாது.

அன்பரே! சிறிதளவேனும் எனக்குக் கலையார்வம் உண்டென்றால் அதற்குக் காரணம் தங்களைப் போன்ற வர்களின் நட்பேயாகும். இவ்வகையில் நான் தங்களைக் கண்டு உண்மையில் பொறாமைகூடப் படுகிறேன். என் ஆசை, தங்கள் உயிர்த் தோழர்களும் ஒப்பற்ற புலவர் களுமாகிய கூத்தருடனும், புகழேந்தியுடனும் சில நாட் களாயினும் அளவளாவி அவர்களின் கவிதா இன்பத் தேனை வாரி வாரி உண்டு உவப்படைய வேண்டு மென்பதே ஆகும். ஆனால், ஏக காலத்தில் இரு பெரும்