பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைவாணன்

119

கலைவாணன்

119

கலைவாணன்

117


புலவர்களையும் பிரியத் தாங்கள் ஒருப்படமாட்டீர் ஆதலால் தங்கள் அபிமானப் புலவராகிய புகழேந்திப் புலவரை மட்டும் சில காலம் என் அரசாங்க கெளரவ விருந்தினராய் அனுப்பி வைக்க வேண்டுகிறேன். தாங்கள் எனது இவ்வேண்டுகோளைப் புறக்கணிக்கமாட்டீர் களென நம்புகிறேன்.

தங்கள் அன்பு மறவாத, சந்திரன் சுவர்க்கி, முரணை நகர். கூத்தர்: விநோதமான வேண்டுகோள். குலோத்து:- இல்லை; வேண்டுகோள் வினையமானதுதான்்.

ஆனால்.........! கூத்தர்!- ஆனாலென்ன! சற்றுமுன் புகழேந்தி தாமாகவே வெளியூர் போக விரும்பினார். இப்போது அழைப்புடன்; போக ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. குலோத்து:- உண்மைதான்். ஆனால், நிலைமை தர்ம சங்கட மானது. - குணசீலர்:- அரசே! புலவர் சில நாட்களாவது எங்கள் விருந் தினராய் இருந்தால் போதும் என்பதுதான்ே எங்கள் மன்னனின் வேண்டுகோள். மீண்டும் வேண்டும்போது தாங்கள் அழைத்துக் கொள்ளலாமே! கூத்தர்!- ஆம்; புகழேந்தியும் சற்று முன் அதைத்தான்ே விரும்பினார். அவர் விருப்பப்படி சில நாள் போய் விட்டுத்தான்் வரட்டுமே. புகழேந்:- அரசே! என் வேண்டுகோள் முரணை நகர் செல்ல வேண்டுமென்பதல்ல. இவ்வழைப்பு எதிர் பாராதது! ஆகையால் தங்கள் சித்தப்படி........ ! குலோத்து:- மன்னனின் வேண்டுகோளை மறுப்பதும் முறை யன்று. தங்களை வேற்றுார் அனுப்பவும் மனமில்லை" உம்; (பெருமூச்சுவிட்டு) இருக்கட்டும். எதற்கும் குணவதி யின் அபிப்பிராயத்தையும் கேட்டுக்கொண்டு நாளை புறப்படுவதுபற்றி யோசிப்போம்.

- (திரை)