பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-22.

இடம்:-முரணை நகர் அரண்மனை. காலம்:-பகல்

(சந்திரன், அமைச்சர், புகழேந்தி, குணசீலர் முதலியோர் உரையாடிக் கொண்டிருக்கின்றனர்.) சந்திரன்:- புலவர் பெருமானே! தங்களைச் சந்திக்கப் பெற்ற இந்நாளே என் வாழ்க்கையின் நன்னாள். என் வேண்டு கோளைப் பொருட்படுத்தித் தங்களை இங்கனுப்பி மகிழ் வித்த சோழ மன்னரின் பெருந்தகைக்கு என்றும் நன்றி யுடையவனாயிருப்பேன்.

புகழேந்தி:- மன்ன! உங்கள் போன்ற மன்னர்களின் அன்பும் ஆதரவும் இன்றேல், புலவர்களுக்குப் புகலிடம்தான்் வேறேது? உங்கள் அன்புக்கு எம்மால் செய்யத்தகும் கைம்மாறும் உண்டோ?

அமைச்சர்:- ஏன் இல்லை? மன்னர்களுக்கு ஏன் உலக மக்கள் அனைவருக்குமே வாழ்க்கை நெறிகளையும் உயர்ந்த நீதிகளையும் வகுத்துக் கொடுப்பவர் தங்களைப்போன்ற புலவர்கள் தான்ே! புலவர்கள் செய்யும் அழியாத் திருப் பணிகளுக்கு உலகோர் அனைவருமே கடமைப் பட்டவர் களல்லவா! சந்திரன்:- உண்மைதான்். உலகத்திற்கு ஒப்பற்ற சேவை செய்வோர்கள் புலவர்கள்தான்். இதில் சந்தேகமென்ன? புகழேந்தி:- மன்ன! அதெல்லா மிருக்கட்டும். என்னை இங்கு

அழைத்த காரணம் என்னவென்பதை...! சந்திரன்:-இமுதலில் தங்களைக் காணவேண்டுமென்ற ஆசை. இரண்டாவது தங்களைக் கொண்டு உயர்ந்த நூல்