பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைவாணன்

119


ஒன்று இயற்றுவித்து உலகோர் பயனடையச் செய்ய வேண்டுமென்ற விருப்பம். புகழேந்தி: உலகத்திற்குப் பயன்படத்தக்க உயர்ந்த நூல்

நான் செய்வதா? சந்திரன்:- ஆம். தாங்கள்தான்் செய்யவேண்டும். தங்களால்

தான்் முடியும். புகழேந்தி:- இது அசாத்தியமான தில்லையென்றாலும், சோழ மன்னரிடம் சில நாட்களில் வருவதாகச் சொல்லிவந்த சொல்லுக்கு ..... ! குணசீலர்:- அதனாலென்ன! மீண்டும் ஒரு ஆளை அனுப்பி நமது தீர்மானத்தைத் தெரிவித்து விட்டால் போகிறது. புகழேந்தி:- நீங்கள் எதைப்பற்றிய நூல் வேண்டுமென்று

விரும்புகிறீர்கள்? . சந்திரன்:- தங்களுக்குத் தெரியாதா என்ன! புகழேந்தி:- அதற்கல்ல. காவியமா? அல்லது, பொதுவான

நீதி நூலா...... o சந்திரன். நூலென்றால், அது எந்த ரூபத்தில் இயற்றி னாலும் நீதி நிறைந்ததாகத்தான்் இருக்கும். என்றா லும் கதாருபத்தில் இருந்தால் பாமரரும் விரும்பிக் கேட்கவும் எளிதிற் புரிந்து கொள்ளவும் முடியும். புகழேந்தி:- ஆம். உண்மைதான்். அப்படியே செய்வோம். இதைப்பற்றிய முடிவுகளை நாளை விவரமாகத் தெரி விக்கின்றேன். - சந்திரன்:- தங்கள் சித்தம் போல் ஆகட்டும். இன்று தங் களைக் காண வேண்டுமென்று அந்தப்புரத்தில் யாவரும் ஆவலோடு காத்திருப்பார்கள். வாருங்கள்; அங்கு போகலாம். - புகழேந்தி:- அப்படியே ஆகட்டும்.

( போகி றார்கள்.)