பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-23.

இடம்:-குணவதியின் அந்தப்புரத்தோட்டம் காலம்:-மாலை. (குணவதி ஒரு மேடையில் சயனித்தவண்ணம் பாடு கிறாள். குமுதம் வீணை மீட்டுகிறாள்.)

(பல்லவி)

இசையினில் யான் கண்ட இன்ப மதற்கு இணை இவ்வுலகினி லில்லையே செழுந்தமிழ்- (இ)

(அனுபல்லவி) பசுங்கிளி இனமும் விலங்கினமும் தன் வச மிழந்தே உள்ளம் பரவசம்கொள்ளும் தமிழ்-(இ)

(சரணம்) எதுகையோடு நல்ல மோனையு மெழில்சேர் இனியபொருள் செறியும் இனிய தமிழில் பண்ணைச் சுதியுடன் இணைத்தே லயத்துணையோடு சொல்வழுவில்லாமல் சொல்லும் செழுந்தமிழ்- (இ)

(பின்புறம் வந்த குலோத்துங்கள் குணவதியின்

பாடலை இணைந்து பாடுகிறான். குணவதி திடுக்

கிட்டுத் திரும்பிப் பார்க்கிறாள்.)

குணவதி:- ஒஹோ! என் பாட்டைக் கேலி செய்கிறீர்களா?

குலோத்:- என்ன! உன் பாட்டைக் கேலி செய்கிறேனா? “பசுங்கிளி இனமும் விலங்கினமும் தன் வசமிழந்தே உள்ளம் பரவசம் கொள்ளும் உன் இசையினில் யான் கண்ட இன்பத்திற்கு இணை இவ்வுலகினில் இல்லை யென்றல்லவா சொன்னேன்.