பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைவாணன்

121


குணவதி:- உம். நீங்கள்கூடத்தான்் நன்றாகப் பாடுகிறீர்கள். குலோத்:- உண்மையாகவா? குணவதி:- உண்மையாகத்தான்் சொல்லுகிறேன்.

குலோத் இல்லை; குமுதா! நீ.........

குமுதம்: ஆமாம்; மகாராஜா இவ்வளவு அழகாகப் பாடுவா

ரென்று நான் நினைத்ததே இல்லை.

குணவதி:- பார்த்தீர்களா? உங்கள் பாட்டைக் கேட்டுக்

குமுதம்கூட ஆச்சரியப்படுகிறாள்!

குலோத்:- என் பாட்டு அவ்வளவு நன்றாயிருக்கு மென்று எனக்கு நம்பிக்கையில்லை. அப்படி இருந்தாலும் அதற்குக் காரணம் நீயாகத்தான்் இருக்க வேண்டும்.

குணவதி:- இல்லை; குமுதா, இதெல்லாம் வீண் பேச்சு. அன்றைக்குக்கூட மகாராஜா முன்பே நன்றாகப்பாடுவா ரென்று யாரோ சொல்லவில்லை? -

குமுதம்:- யார் சொன்னது? எனக்குச் சரியாக நினை

வில்லையே!

குணவதி:- (கண்ணைக் காட்டி) ஆமாமென்று சொல்லேண்டி.

குலோத்: என்ன குணவதி, என்னைப் புரளி செய்கிறாய்

போலிருக்கிறதே!

குணவதி:- இல்லை; இல்லை. நான் தங்களைப் புரளி செய் வேனோ? யாரோ அப்படிச் சொன்னதாக ஞாபகம். உம். அதிருக்கட்டும். முரணை நகர் சென்ற நமது புலவரைப் பற்றிய செய்தி ஏதேனும் வந்ததா? சில நாட் களில் வந்து விடுவதாகச் சென்றவர் ஏன் இன்னும் வர வில்லை? - -