பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

கலைவாணன்


குலோத்:- உம், அதைச் சொல்ல மறந்துவிட்டேனே! அங்கு சந்திரன் சுவர்க்கியின் விருப்பத்திற்கிணங்க நூல் ஒன்று இயற்றி ஆடம்பர வைபவங்களுடன் அரங்கேற்ப்பட்ட தாம். அந்நூலைக்கேட்டு மகிழாதாரும் புகழாதாரும் இல்லையாம்.

குணவதி:- அப்படியா! நூலின் பெயர்?

குலோத்: “நளவெண்பா' என்பது நூலின் பெயராம். இது வியாசரால் எழுதப்பெற்ற மகாபாரதத்திலுள்ள ஒரு கிளைக்கதையாகிய நளன் சரித்திரத்தைத் தழுவி எழுதப் பெற்றதாம். நூல் வெகு சிறப்பாக அமைந்திருப்பதாக எல்லோரும் சொல்லுகிறார்கள்.

குணவதி:- அவ்வளவு சிறப்பாய் அமைந்த அந்நூல் தமிழ் நாட்டுச் சரித்திரக் கதையாகவே இருந்தால் இன்னும் சிறப்பாய் இருக்குமல்லவா?

குலோத்: நூல் எந்த நாட்டைப் பற்றியதாய் இருந்தால் என்ன? குணவதி உயர்ந்த கருத்தும் நீதியும் அமைந் திருந்தால் சரிதான்ே! மேலும் அரசனின் விருப்பம் அப்படி இருந்திருக்கலாம்.

குணவதி:- எது எப்படியாயினும் தங்களைப்போல் புலவரைச் - சிறையிட்டு வருத்தாமல் கிடைத்த சந்தர்ப்பத்தை நல்ல வகையில் பயன்படுத்திக் கொண்ட முரணை மன்னர் சாமர்த்தியசாலிதான்். . . குலோத். இந்தச் சந்தர்ப்பத்தையே காரணமாய் வைத்துக் கொண்டு வழக்கப்படி இன்றும் உன் பேச்சு வன்மையால் என்னை மடக்கிவிட்டாயே! முரணை மன்னனைவிட நீயல்லவா சாமர்த்தியக்காரி!...உம்; இப்போதென்ன மோசம்? நாளைக்கே புலவரை வரவழைத்து இன்னும் கூத்தர் முதலிய புலவர்களையும் கொண்டு ஒரு