பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைவாணன்

123


நூலென்ன, ஆயிரம் நூல் எழுதிக் குவித்து விடுவோம். போதுமா!

குணவதி:- சரிதான்். நூல் எழுதுவதென்றால் மரத்திலிருந்த மாங்காய் பறிப்பதென்றா நினைத்தீர்கள்? அதுதான்் முடியாது. இந்தப் புலவர்களிடத்திலும் கவிஞர்களிடத் திலும் அதிகாரத்தால் எந்தக்காரியத்தையும் சாதிக்கவே

முடியாது.

குலோத். பின்பு என்னதான்் செய்யச் சொல்லுகிறாய்,

குணவதி? -

குணவதி ஒன்றுமே செய்யவேண்டாம். புலவர்களின் வாழ்க் கையில் நிம்மதியும் மனத்தில் மகிழ்ச்சியும் இருக்கு மானால் எத்தனையோ நூல்களை அவர்கள் தாமாகவே இயற்றி விடுவார்கள். -

குலோத்:- ஆம், குணவதி வயதிற் சிறியவளாயினும் கவிஞர் -

களின் மனப்போக்கை எளிதில் உணர்ந்துகொள்ளும் திறமை உன்னிடம் அமைந்திருக்கிறது.

குணவதி:- போதும். இந்த முகஸ்துதி,

குலோத்:- இல்லை. நான் சொல்வது உண்மை.

குணவதி:- உண்மையென்றால் காரணம் தாங்களாகத்தான்்

இருக்கவேண்டும்.

குலோத்:- பார்த்தாயா! முன்பு நன்றாகப் பாடுவதாகச் சொன்னபோது, நான் என்ன சொன்னேனோ அதையே திருப்பிச்சொல்லிவிட்டாயே!

குணவதி:- (சிரிக்கிறாள்.)

குலோத்:- (சிரிக்கிறான்.)

குணவதி:- அன்பரே! புலவரைச் சீக்கிரம் அழைத்து வர

ஏற்பாடு செய்ய வேண்டும்,