பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

கலைவாணன்


குலோத்:- ஏன்?

குணவதி:- அவர் இயற்றிய நூலை நாம் கேட்டு மகிழ

வேண்டாமா!

குலோத்: ஆம். விரைவில் அழைத்து வர ஏற்பாடு செய்

கிறேன். போதுமா?

குணவதி:- பேச்சில் பொழுது போனதுகூடத் தெரியவில்லை.

நிலவுகூட எழுந்து விட்டதே!

குலோத்:- ஆமாம். அதுதான்் குறைவாயிருந்தது. இப்போது

அந்தக் குறையும் இல்லை!

குணவதி:- தாங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?

குலோத்து:- உண்மையைத்தான்் சொல்லுகிறேன். அதோ பார் எழில் நிறைந்த புது மலர்கள் நிறைந்த சோலை, மலர்களின் நறுமணத்தை வாரிக்கொண்டு மிதந்து வரும் தென்றல், மதுவின் இன்பத்தில் மகிழ்ந்த வண்டினங் களின் இனிய இசை, மயில்களின் ஆடல்; இவைகளுக் கெல்லாம் இடையே இருக்கும் நமக்குச் சந்திரன் இல்லா திருந்தது குறையல்லவா?

(குணவதி நாணித் தலைகவிழ குலோத்துங்கன் பாடுகிறான்) (திரை)