பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-24.

இடம்:-முரணை நகர் அரண்மணை. காலம்:-பகல்.

(சந்திரன், புகழேந்தி, அமைச்சர் முதலியோர்.) புகழேந்தி:- மன்னர் மன்னா வீண் கவலை வேண்டாம். உங்களைப்போலவே சோழமன்னரும் என்மேல் அளவற்ற அன்புள்ளவர். ஆகையால் அவர் அழைப்பைக் கண்ட பின்பும் நான் அவரைக் காணச் செல்லாதிருத்தல் முறையன்று. சந்திரன்:. கனவிலும் நனவிலும் கற்பனையிலும் கண்ட வற்றை யெல்லாம் காவியத்தில் புகுத்தி என்னையும் என் நாட்டு மக்களையும் இன்பவாரிதியி லாழ்த்திய தங்களை எப்படிப் பிரிந்திருக்க முடியும்?

புகழேந்தி:- பிரிந்தால் மீண்டும் சந்திக்கமாட்டோமா? நான் பிரிந்தாலும் உமது தூய அன்பால் பிணிக்கப்பெற்ற என் உள்ளம் உம்மை நீங்கிப்பிரியாது. என் உள்ளத்தில் என் அன்புக்கு முதல் இடம் பெற்றவர் தாங்கள்தான்ே!

சந்திரன்:- புலவர் மணியே! தங்கள் இலக்கியச் சுவையை அருந்தி அருந்தி நாங்களடைந்த இன்பத்தை எங்களால் மறக்க முடியாது. உறந்தை சென்று மீண்டும் அடிக்கடி வந்து எங்களை மகிழ்விக்க வேண்டும்.

குணசீலர்:- விண்மீன்களுக்கு இடையே தோன்றிய வெண் னிலாவைப் போல் வந்த தாங்கள் போன பின் இப் புலவர் சபையே சந்திரனில்லாத வானம் போல் பொலி விழந்துவிடும். ஆகையால் நானும் தங்களுடன் சோழ நாடு வந்து சில நாட்கள் தங்கியிருக்க விரும்புகிறேன்.