பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

கலைவாணன்


புகழேந்தி:- குணசீலரே! அரசர் அன்பின் மிகுதியால் எம்மைப் பிரிய வருந்தும் இச்சமயத்தில் தாங்களும் என்னுடன் வந்துவிட்டால் அரசரைத் தேற்றுவோர் யார்?

அமைச்சர்: அரசே பொழுதாகிறது. சோழமன்னரின் விருப்பப்படி இன்றே புலவரை அனுப்பிவிட்டுப் பிறகு வேண்டுமானால் சில நாட்களில் புலவரை மீண்டும் அழைத்து வரலாம். ஆகையால்.........

புகழேந்தி:- ஆம்; அமைச்சர் செல்வதுதான்் சரி, சீக்கிரம் நானாகவே இங்கு வருவேன். இப்போது பிரயாணத் திற்கு.....

சந்திரன்:- ஆம் வேறு வழியில்லை. அமைச்சரே, சீக்கிரம் புலவரின் பிரயாணத்திற்கு ஏற்பாடுகள் ஆகட்டும்.

அமைச்சர்:- எல்லா ஏற்பாடுகளும் ஆகிவிட்டது. வீரர்கள் பாதுகாப்புடன் நான்கு சிவிகைகளும் தயாராகி இருக் கின்றன. . . . . . .

சந்திரன்: (அமைச்சரிடம் ஏதோ ரகசியமாகச் சொல்லு

கிறாா.)

அமைச்சர்:-உத்திரவு.

புகழேந்தி:- அமைச்சரை எங்கே அனுப்பினர்கள்?

சந்திரன்:- எங்குமில்லை. இதோ வந்துவிடுவார்.

(ஆட்கள் பலர் தட்டுகளில் திரவியங்களும் பட்டாடைகளும் கொண்டு வந்து வைக்கிறார்கள்.)

புகழேந்தி:- அரசே! இவையெல்லாம் எதற்கு?

சந்திரன்:- தங்கள் பெரும் புலமைக்கு அன்பளிப்பாக என் னால் இயன்றதைச் செய்கிறேன். அன்புடன் ஏற்றுக்

கொள்ள வேண்டும்.