பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைவாணன்

127


புகழேந்தி:- மன்ன! நான் தனியன். எனக்குப் பசித்த வேளை யில் ஒரு பிடி உணவே தேவை. அது எனக்கு எங்கும் எப்போதும் கிடைக்கும். பொன்னும் பொருளும் ஆடையாபரணங்களும் எனக்கு எதற்கு?

சந்திரன்:- புலவரே! என் கடமையை நான் செய்கிறேன். இதை மறுக்காமல் ஏற்றால் என் மனம் மகிழ்ச்சியடையும்.

புகழேந்தி - அரசே! உமது வேண்டுகோளை மறுக்கவேண்டு மென்பது என் நோக்கமல்ல. இந்தப் பொருள்களை என் இஷ்டப்படி உப்யோகித்துக் கொள்ளலாமல்லவா?

சந்திரன்:- தாராளமாய் உபயோகிக்கலாம்.

புகழேந்தி:- அமைச்சரே! இப்பொருளனைத்தையும் தங்கள் வசம் ஒப்புவிக்கிறேன். இவைகளை ஏழைகளுக்கும் புலவர்களுக்கும் வழங்கிவிட வேண்டும்.

அமைச்சர்:- (மெளனம்.) புகழேந்தி;- ஏன்? என் பொருளை என் இஷ்டப்படி

வழங்குவதில்கூட அதிருப்தியா? சந்திரன்:- புலவர் பெரும! தாங்கள் மனிதசமூகத்திற்கே அப்பாற்பட்ட நடமாடும் தெய்வம். தன்னலத் தியாகி, உலக மக்களின் உயர்வுக்காகவே உயிர் வாழும் உத்தமர். தங்களைப் போன்ற மகாத்மாக்கள் உலகில் பன்னூற்றாண்டுகளுக்கு ஒருவரே தோன்றுகிறார்கள். தங்களால் என் உள்ளமும் பரிசுத்தமடைந்தது. இனி இந்நாடும் நாட்டிலுள்ள பொருள்களனைத்தும் நானும் உங்களுக்கே சொந்தம். எல்லாம் தங்கள் சித்தப்படி ஏழைகளுக்கும் புலவர்களுக்குமே பயன்படும்.

புகழேந்தி:- அரசே! அதுவல்ல என் விருப்பம். இந்நாட்டுக்கு நான் மீண்டும் வரும்போது இப்போது உள்ளதைப்