பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-25.

இடம்:-திருநெய்த்தான்ம் சிவாலயம். காலம்:-மாலை (பக்தர்கள் பலரும் கூடி இருக்கின்றனர்.) கூட்டத்தில் ஒருவர்:- ஏனையா! இன்று என்ன பகவானுக்கு

என்று மில்லாத ஆடம்பர அலங்காரம்? மற்றவர்: அடடே! உமக்கு விஷயம் தெரியாதோ! முரணை நகர் சென்றிருந்த நமது புகழேந்திப் புலவர் நேற்றுதான்் இங்கு வந்தார். அந்த மகிழ்ச்சியின் காரணமாக மன்னர் எல்லா ஆலயங்களுக்கும் இன்று விசேஷ ஆராதனைகள் நடத்த உத்திர விட்டிருக்கிறார். அதோ மகாராஜா கூட வருகிறார் போலிருக்கிறதே! (சோழன், புலவர்கள், மற்றும் பரிவாரங்கள் யாவரும் வருகிறார்கள், தீபாராதனை முடிகிறது.) குலோத்து:- புலவர்களே! சிவபெருமானின் அலங்காரத்

திருக்கோலத்தைப் பார்த்தீர்களா! கூத்தர்:-ஆம்: ஐயன் இன்று ஆனந்த ருபியாய் விளங்குகிறார். புகழேந்தி:- இன்றென்ன என்றுமே அவர் ஆனந்த ரூபிதான்ே. குலோத்து:- ஆம். ஆனால் இந்த உண்மையைத் தாங்கள் உணர்ந்திருப்பதைப் போல், மற்றவர் எல்லோரும் உணர்ந்து கொள்ள முடிவதில்லை. உண்மையில் நான் இன்று காணும் எழிலை என்றுமே கண்டதில்லை. இப்புண்ணிய மூர்த்தியின் மீது இன்று நீங்கள் இருவரும் பாடவேண்டும். கூத்தர்:- என்ன கருத்தில் பாடவேண்டும்? குலோத்து:- நெய்த்தான்ைச் சேவித்தே' என்பதை

ஈற்றடியாக வைத்துக் கொண்டு பாடுங்களேன். سنہ 5&