பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

கலைவாணன்


கூத்தர். பாடுகிறேன்.

(விருத்தப் பாட்டு) விக்காவுக்கா வித்தாவிப்போய்

விட்டார்கட்ட்ார் சுட்டுர்புக்கார் இக்காயத்தா சைபாடுற்றே

இற்றேடிப்போய் வைப்பீர்நிற்பீர் அக்காடப்பேய் தொக்காடாச்சூ

ழப்பாடத்தீ வைப்பாடப்பூண் நெக்காடக்கானத்தாடப்போம்

கெய்த்தான்த்தான்ைச் சேவித்தே. புகழேந்தி:- (விருத்தப் பாட்டு)

தற்கோலிப்பூ சற்பாசத்தே

தட்டாமற்சாகைக்கே நிற்பீர் முற்கோலிக்கோலிப் பூசித்தே

முட்டாமற் சேவித்தே நிற்பீர் வற்றாநெட்டோ டைப்பாரைச்சேல் மைப்பூகத்தேறித்தாவிப்போய் நெற்றாளுற்றாலைப் பாகிற்சேர்

கெய்த்தான்த்தான்ைச் சேவித்தே.

குலோத்து:- மிக்க மகிழ்ச்சி! மிக்க மகிழ்ச்சி!!

புலவர்களே!

கற்பனையிலும் காணமுடியாத இன்பங்களை யெல்லாம்

உங்கள் கவிதைகளில் காணுகின்றேன்.

கூத்தர்:. கவிதையில் இன்பம் காண்பது எல்லோருக்கும் சாத்தியமில்லை. தங்களைப் போல் ரசிகர்களால் தான்்

அது முடியும். புகழேந்தி:- மிகச் சரியாகச் சொன்னீர்கள்!

குலோத்து:- நேரம் போனதே தெரியவில்லை. இப்படி

நடந்துகொண்டே பேசலாம்; வாருங்கள்.

(போகிறார்கள்.) (திரை)