பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-27

இடம்:-உறையூர் வீதி. காலம்:-மாலை

(குலோத்துங்கன், புகழேந்தி, கூத்தர், மூவரும் வருகிறார் கள். அங்கோர் வீட்டின் முகப்பில் அமர்ந்திருந்த ஒளவையார் அரசனைக் கண்டு ஒரு காலையும், புகழேந்தியைக் கண்டு மற்றெரு காலையும் மடக்குகிறார் ஆனால், கூத்தரைக் கண்டதும் இரு கால்களையும் நீட்டிக் கொள்கிறார். இதைக்கண்டு கூத்தர் அவமான மும் ஆத்திரமும் கொள்கிறார்.

கூத்தர்:- அரசே! பார்த்தீர்களா இக்கிழவியின் செருக்கை!

குலோத்து:- யார் இந்த மூதாட்டி?

புகழேந்தி:- யாரா? இவர் கல்விக்கடல் ஒளவை மூதாட்டியா

ரல்லவா!-அம்மையே, வணக்கம்.

ஒளவை:- அன்பரே! வணக்கம். அரசே! வணக்கம்.

கூத்தர்:- அம்மையே! தாங்கள் இவ்வாறு என்னை அவமதித்ததற்குத் தக்ககாரணம் கூறியாகவேண்டும்.

ஒளவை:- காரணம் சொல்ல வேண்டுமோ? சொல்லுகிறேன். கிரீடாதிபதியாகிய சோழனுக்கும் புலவர் பதியாகிய புகழேந்திக்கும் மரியாதை செய்யவேண்டியது கடமை யென நான் நினைத்து அப்படியே செய்தேன். ஆனால் அகந்தையும் அழுக்காறும் கொண்ட மனம் கண்டதும் மடக்கிய இரு கால்களையும் நீட்டினேன். இதில் தவறென்ன?