பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

கலைவாணன்


குலோத்துங்:- அம்மையே! எனது அரசவைப் புலவரை எனக்கு முன்பாகவே, தாங்கள் இப்படி அவமதிப்பது முறையாகுமா?

ஒளவை:- நான் முறை தவறி விட்டேனென்பது தங்கள் முடிவா? இல்லவே இல்லை. புகழேந்தியின் புலமைக்கு முன்கூத்தரின் புலமை எவ்வகையிலும் ஈடாக முடியாது.

கூத்தர்:- என் கேள்விக்குப் பதில் இதுவல்ல. இது வீண்பேச்சு.

ഞെഖ: கூத்தரே! வீண் பேச்சுப் பேசுபவள் நானல்ல. அது இச்சகம் பேசிப் பிழைக்கும் உம்மைப் போன்ற புல்லியர் களின் செயல். கோபம் வந்து பயனில்லை. நீர் சிறந்த புலவரென்று சொல்லுகிறீரே! எங்கே? மதியென்னும் பொருள் மும்முறை தோன்ற சோழமன்னரையும், சோழ நாட்டையும் புகழ்ந்து ஒரு செய்யுள் சொல்லுங் கள்; பார்ப்போம். கூத்தர்:- (கேலிச் சிரிப்புடன்) உம்...சொல்லிவிட்டால்? ஒளவை:- அதைப்பற்றிப் பிறகு யோசிப்போம். கூத்தர். உ.ம்... சொல்லுகிறேன்.

- (விருத்தப்பா) வெள்ளத் தடங்காச் சினவாளை வேலிக்கமுகின் மீதேறித் துள்ளி முகிலைக் கிழித்துமழைத்

துளியோடிறங்குஞ் சோணாடா கள்ளக் குறும்பர் குலமறுத்த

கண்டா வண்டர் கோபாலா பிள்ளை மதிகொள் சிறுபேதை

பெரிய மதியு மிழந்தாளே.'

ஒளவை:- கைகொட்டி நகைத்து) ஒட்டா, ஒரு மதி கெட்டாய். நன்று. நன்று. உன் கவிபாடும் திறமை!