பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

கலைவாணன்


இயற்கைதான்ே அதிருக்கட்டும். தாங்கள் இங்கு எப் போது வந்தீர்கள்? ஏன் இச்சிறு குடிசையில் அமர்ந் திருக்கிறீர்கள்? வாருங்கள்; அரண்மனைக்குப்போவோம்.

ஒளவை:- வேந்தே அரண்மனையும் சிறு குடிசையும் எனக்கு ஒன்றுதான்். செருக்குற்ற)செல்வர்களுடன் பழகுவதை விட வறுமை மிக்க ஏழைகளுடன் பழகுவதே இன்பமா யிருக்கிறது. அன்பு, தயை, கருணை, சாந்தம் முதலிய அரிய குணங்களை அவர்களிடத்தில் தான்் பரிபூரண மாய்க் காண முடிகிறது.

குலோத்து:- நாளை நமது கலாமண்டபத்தில் புகழேந்திப் புலவர் இயற்றிய நளன் சரித்திரத்திை அரங்கேற்ற ஏற்பாடு செய்திருக்கிறேன். தாங்கள் அவசியம் வரவேண்டும்.

புகழேந்தி:- ஆம்; அம்மையே. அவையில் உங்களைப் போன்ற பெரியோர்கள் இருந்தால் தான்், எனக்கும் மகிழ்ச்சியாய் இருக்கும். மேலும், ஏதேனும், குற்றம் குறைகள் இருந்தாலும் எடுத்துச் சொல்லித் திருத்துவீர்கள்.

ஒளவை:- புலவரே! தாங்கள் எழுதிய காவியத்தைக் கேட்காமல் இருப்பேனா! அவசியம் வருகிறேன். ஆனால் தங்கள் பாட்டில் குற்றமா? ஒருக்காலும் இருக்காது.

குலோத்து:- சரி; வாருங்கள். அரண்மனைக்குப் போவோம்.

(எல்லோரும் போகிறார்கள்.)

(திரை.)