பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-28

இடம்:-சோழன் கலாமண்படம். காலம்:-பகல் (சோழ நாட்டில் கலாமண்டபம் என்றுமில்லாத எழிலுடன் அலங்கரிக்கப் பெற்றிருக்கிறது. பொது மக்களும் புலவர்களும் ஏகமாய்க் கூடியிருக்கின்றனர். ஒருபுறம் அரசர், கூத்தர், கம்பர், ஒளவை முத்லியோர் அமர்ந்திருக்கின்றனர்.) புகழேந்தி:- (கைகூப்பி வணங்கி) வாழ்க, செந்தமிழ்!

எல்லோரும்:- (எழுந்து கைகூப்பி) வாழ்க!

புகழேந்தி:- வாழ்க, தமிழ் நாடு!

எல்லோ: வாழ்க!

புகழேந்தி:- வாழ்க, சோழ மன்னர்!

எல்லோ:- வாழ்க!

(புகழேந்தி அமருகிறார். யாவரும் அமருகின்றனர்.)

புகழேந்தி:- பெருமை மிக்க புலவர்களே! மாட்சிமை மிக்க மன்னர் பிரானின் வேண்டுகோளுக்கிணங்கி என்னால் இயற்றப்பெற்ற நளவெண்பா வெனும் நளன் சரித்திரத்தைச் சொல்லத் தொடங்கி நளனின் நாடு நகரச் சிறப்பு முதல் நளன் தமயந்தி இருவரும் அன்னத் தின் துதினால், ஒருவர் மீதொருவர் காதல் கொள்வதும் தமயந்தியின் சுயம்வரம் நிச்சயித்தலும், தமயந்தியை மணம்புரிய எண்ணிய இந்திரன், அக்கினி, யமன், வருணன் ஆகியோருக்காக நளன் தமயந்தியின்பால் தூது செல்வதும், தமயந்தி நளனையே மணக்க உறுதி