பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

கலைவாணன்


கொள்வதும், நளன் இந்திரன் முதலானோரிடம் வரம் பெற்றேகலும் நேற்றுவரை கூறக்கேட்டீர்கள். இனி தமயந்தி நளனைக் கண்டது முதல் விரக வேதனைப் படுவதையும், தமயந்தியின் சுயம்வரத்தையும் பற்றிச் சொல்வோம். - . . .

தூதுவந்து சென்ற நளனைத் தொடர்ந்தே தமயந்தி யின் உள்ளமும் சென்றுவிட்டது. அதைமீட்க வகையறி யாமல் தவிக்கிறாள் தமயந்தி. என்றைக்கும் போல் தான்் அன்றைக்கும் சூரியாஸ்தமனத்திற்குப் பின் உலகை இருள் கவ்விற்று. ஆனால், அன்று அவளுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒளிவடிவில் தோன்றித் தன் உள்ளத்தைப் பிரகாசிக்கச் செய்த நளன், தன்னை விட்டு நீங்கி விட்டானல்லவா! அதனால் தான்், தன் உள்ளமும் உலகமும் இருண்டுவிட்ட தாகநினைக்கிறாள். நளன் செல்லுகிறான்; அன்று தான்் மாலை மறைவை யும் அவள் காண்கின்றாள். எப்படி! - . (வெண்பா) மல்லிகையே வெண்சங்கா, வண்டுத வான்கரும்பு வில்லிகணை தெரித்து மெய்காப்பு-முல்லையெனும் மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே புன்மாலை யந்திப் பொழுது. கூத்தர்:- நிறுத்தும் புலவரே! நிறுத்தும். பாட்டின் முதல்

அடி என்ன? - புகழேந்தி; மல்லிகையே வெண்சங்காய் வண்டுதகூத்தர்:- புலவரே! போதும். மலரின் மேல் புறத்தில் அமர்ந்து மதுவருந்தி ரீங்காரம் செய்யும் வண்டினங் களுக்கு, சங்கின் கீழ்ப் புறத்தை வாயில் வைத்து ஊது வோரை உவமையாகக் கூறியது குற்றமல்லவா? இப்படித் தப்புப் பாட்டுப் பாடும் உம்மையும் சிறந்த புலவரென்று தமிழ் மூதாட்டி ஒளவையார் பாராட்டியது ஆச்சரியந்

தான்்!