பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைவாணன்

139


புகழேந்தி:- கூத்தரே! புலவர்களும் அறிஞர்களும் நிறைந் துள்ள இத்தகைய அவையில் அகம்பாவமும் ஆத்திரமும் கொண்டு, தமிழ் மூதாட்டி போன்ற பெரியோர்களை இழித்துப் பேசுவது தங்களுக்கே இழிவாகும். என் பாட்டில் குற்ற மிருப்பின் என்னைத்தான்் கேட்க வேண்டும்.

கூத்தர்:- அந்த நியாயங்கள் எனக்குத் தெரியும். என் கேள்விக்குப் பதில் செல்லும். இல்லையேல் எல்லோருக் கும் முன் உமது குற்றத்தை ஒப்புக் கொள்ளும்.

புகழேந்தி:- என் பாட்டு களன்ைத்தும் குற்றமாகத் தோற்று வதற்கும் சமய சந்தர்ப்பம் தெரியாமல் பெரியோர்களை அவமதிப்பதற்கும் எப்படித் தங்களுக்குக் கர்வமும் அகம்பாவமுமாகிய மயக்கம் காரணமா யிருக்கிறதோ, அப்படியே மலர்களிலுள்ள மதுவை அளவு கடந்து அருந்தி மயங்கித்திரியும் வ ண் டி ன ங் களு க் கு ம் வாயென்றும் மற்ற தென்றும் தெரியாமற் போவது இயற்கை தான்ே!

எல்லோரும்:- ஆஹா! அருமையான விளக்கம்.

(எல்லோரும் கை தட்டி ஆரவாரம் செய்கின்றனர்.) அற்புதமான கற்பனை!

புகழேந்தி:- ஐயன்மீர்! அவையின்கண் ஐயம் யாருக்கேனும் தோன்றுமாயின், கேட்க வேண்டியதும் நூலாசிரியன் ஐயத்தை அகற்ற வேண்டியதும் கடமை. ஆனால், கூத்தரின் எண்ணம் அதுவல்ல. எப்படியாவது என் நூலில் குற்றம் கற்பித்து என்னை இழிவுபடுத்த வேண்டு மென்ற அவாவினாலேயே ஆரம்பத்திலிருந்து இத்தகைய போலி வாதங்கள் செய்கிறார். எனினும் அதற்கும் தக்க மறுப்பளித்து என் நூல் மாசற்ற தென்று மெய்ப்பிக்க