பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைவாணன்

141


புகழேந்தி:- என்ன! சந்தேகமிருந்தால் கேளுங்கள்.

கூத்தர்:- வானத்தில் நிறைந்திருக்கும் நட்சத்திரங்களை கொப்புளங் கொண்ட குளிர் வானென்று சொல்வது அழகாகத்தான்் இரு க் கி ன் ற து . ஆனால்...! அக்கொப்புளங் களிவிருந்து சீழோ அல்லது சிலைநீரோ வடிய வேண்டாமா? அதற்கு...!

புகழேந்தி:- இரவில் பணித் தாரைகள் பெய்யவில்லையா?

அதையே நீராக வைத்துக்கொண்டால் போகிறது. (எல்லோரும் கை கொட்டுகிறார்கள். நகைக்கிறார்கள்.)

எல்லோரும்:- சரி, சரி! புலவர் சொல்வது ரொம்ப சரி!

குலோத்து:- வீண் ஆரவாரம் ஏன்? கலைக்கூடத்திலா

கேளிக்கை?

கம்பர்- வீண் வாதங்களையும் அர்த்தமற்ற கேள்விகளையும் கேட்டால் கூட்டத்தில் கொந்தளிப்பு ஏற்படுவது இயற்கை தான்ே!

கூத்தர்:- ஐயா, கவிச்சக்கரவர்த்தி கம்பரே! இங்கு யாரும் வீண்வாதம் செய்யவில்லை. சந்தேகப் பட்டு யார் எதைக் கேட்டாலும் நூலாசிரியன் தக்க சான்று சொல்லித்தான்் ஆகவேண்டும்.

ஒளவை:- கேள்விகள் எழுவது இயற்கைதான்். ஆனால், அவை அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தமாய் இருக்கவேண்டாமா?

குலோத்து:- அம்மையே! அதைப்பற்றிப் பிறகு பேசுவோம். இன்று எனக்கு ஏதோ மனம் நிம்மதியற்றிருக்கிறது. ஆகையால் நூலின் பிற்பகுதியை நாளை தொடங் கலாமென நினைக்கிறேன்.