பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-29

இடம்:- வீதி, காலம்:- மாலை

(புகழேந்தி மிக்க துயரத்துடன் அடிமேலடி வைத்து அயர்ச்சியோடு மெள்ள நடந்து வருகிறார்.)

புகழேந்தி:- ஈஸ்வரா! இது என்ன சோதனை? கூத்த ரென்னும் இக் கூற்றுவனின் தூற்றுதலையும் அவமதிப் பையும் நான் எத்தனை நாட்களுக்குத் தான்் சகித்துக் கொண்டிருப்பேன். தவளைக்குப் பாம்பையும் பாம்புக்குக் கீரியையும் எலிக்குப் பூனையையும் படைத்தது போலல்லவா எனக்குக் கூத்தரை ஜன்மப் பகைவராய்த் தோற்றுவித்திருக்கிறாய். நான்மனமார அவருக்கு ஒரு தீங்கும் விளைக்காதிருக்கும் போது அவர் ஏன் எப்பொழுதும் புண்ணில் கோலிடுவது போல் என்னை வருத்தித் திருப்தியடைகிறார்? ஒளவையும், கம்பரும்ஏன்? இந்த உலகனைத்துமே என் கவியைக் கேட்டுப் புகழ, இந்தக் கூத்தர் மட்டும் இகழுவதற்கும் என்னைக் கண்டு அசூயை கொள்வதற்கும் நான் அவருக்குச் செய்த தீமைதான்் என்ன? நான் இப் பிறவியில் யாருக்கும் எவ்விதத் தீங்கும் செய்ய என் மனத்தாலும் நினைத்தறியேனே! அன்று சோழனுக்குப் பெண் கேட்க வந்தார் பாண்டியன் அவைக்கு. அவையிலேயே பாண்டியனை இழிவுபடப் பாடினார். அப்போது நான் பாண்டியனின் அபிமானப் புலவனாயிருந்தேன். என் உயிர் த் தோழனாகிய பாண்டியனை இழிவுபடுத்திப் பாடியதைப் பொறாமல், பதிலுக்குப் பாடினேன். இது ஒரு குற்றமா? என் கடமையைத்தான்ே செய்தேன். பின்பு சோழ நாடு