பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

கலைவாணன்


வந்தபின், புலவர்களைப் பலியிடும் கொடுமையைக் கண்டு என் மனம் குமுறியது. அத்தீச் செயலைத் தடுக்க எத்தனித்ததற்காக என்னைச் சி ைற ப் படுத் தி வருத்தினார். அ ைவ ெய ல் லா ம் கூட எனக்கு வருத்தமாய்த் தெரியவில்லை. ஆனால், சதா அவரால் ஏவப்படும் சொல்லம்பு அல்லவா என் உள்ளத்தைச் சல்லடைக்கண்கள் போல் துளைத்துச் செல்கிறதுஇந்நாட்டை விட்டே வேறெங்கேனும் போய் விடலா மென்றாலும் என் அன்புத் தெய்வமாகிய குணவதியின் பாசமல்லவா என் கால்களுக்கு நீங்காத் தளையாக நிற்கிறது?

(சற்று மெளனம்.)

ஆம். அதுதான்் சரி! தன்னைக் கொல்ல வரும் பசுவையும் கொல்லலாம். கலாதேவியின் திருக்குமாரர் களாகிய கவிஞர்களையும் புலவர்களையும் பலியிட்டு மகிழ்ந்த இவரைக் கொன்றால் கடவுள் கூட மகிழ்ச்சி யடைவார். ஆம். அவர் இவ்வுலகில் இருக்கும் வரை நான் நிம்மதியுடன் இருக்க முடியாது. இதோ! இதோ! போகிறேன். இன்றிரவுக்குள் அவரை ஒழிக்காமல்

விடுவதில்லை.

(செல்லுகிறார்.)

(புகழேந்தி பேசியதையும் செல்வதையும் பதுங்கி யிருந்து கவனித்துக் கொண்டிருந்த இரண்டு வேவுக் காரர்கள் விரைந்து செல்லுகின்றனர்.)

(திரை.)