பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

கலைவாணன்


(வெண்பா) "கொங்கை யிளநீராற் குளிர்ந்தவிளஞ் சொற்கரும்பாற் பொங்கு சுழியாம் புனற்றடத்தில்-மங்கைதன் கொய்தாம வாசக் குழனிழற்கீ ழாறேனோ வெய்தாமக் காம விடாய்."

(பாட்டுச் சப்தம் கேட்டு கூத்தரின் மனைவி கதவைத் திறந்துகொண்டு வருகிறாள். கூத்தரின் அயர்வைக் கண்டு திகைக்கிறாள்.)

தேவி. ஸ்வாமி ஏன் இப்படித் திண்ணையிலேயே உட்கார்ந்து விட்டீர்கள்? இந்நேரம் வரை இங்கேயே தான்் தங்கள் வருகைக்காகக் காத்திருந்தேன். சற்று முன்புதான்் கதவை அடைத்துக் கொண்டு உள்ளே சென்றேன். இரவு நாழிகை பத்துக்கு மேல் இருக்குமே? இவ்வளவு நாழிகை வரை உணவு உண்ணாதிருந்தால் உடம்பு கெட்டுப் போகாதா? வாருங்கள் அமுதுண்ண லாம்.

(கூத்தர் மெளனமாகப் புன்னகை செய்கிறார்.) ஸ்வாமி ஏன் மெளனம் சாதிக்கிறீர்கள்? தங்களுக்குப் பசிக்கவில்லையா? வாருங்கள்? உள்ளே போகலாம்.

(மீண்டும் பைத்தியம் போல் சிரித்துவிட்டுப் பாடுகிறார்) .

கூத்தர்:

(வெண்பா) "இற்றது நெஞ்ச மெழுந்த திருங்காதல் அற்றது மான மழிந்ததுகாண்-மற்றினியுன் வாயுடைய தென்னுடைய வாழ்வென்றான் வெங்காமத் தீயுடைய நெஞ்சுடையான் றேர்ந்து.