பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைவாணன்

147


தேவி. ஸ்வாமி! இதோ என்னைப் பாருங்கள். நான் அழைப்பது தங்களுக்குத் தெரியவில்லை? இந்நேரத்தில் என்ன இப்படி ஏதேதோ பாடுகிறீர்கள்?

கூத்தர்:- சீ, முட்டாள். ஏதேதோவா பாடுகிறேன்? அற்புதமான கவிதைகள்! நினைத்தாலும் இனிக்கும் நிகரற்ற கவிதைகள்! தமிழ்த்தாயின் தவப்புதல்வர் புகழேந்தியின் பொன் மொழிகள். ஆஹாஹா! நினைக்கும் போதெல்லாம் என் நெஞ்சம் பரவசமா

கிறது!

தேவி:- இருக்கட்டும். ஏதேனும் கொஞ்சம் ஆகாரம் உண்ட பின்பு பாடிக்கொண்டிருக்கலாம். வாருங்கள். நிசி வேளையாகப் போகிறது.

கூத்தர்:- தேவி! எனக்குப் பசியில்லை; என்னைத் தொந்தரவு

செய்யாதே.

தேவி. பசியில்லையா? இரவு இத்தனை நாழிக்குப் பிறகு கூடவா பசியில்லை? இரவில் பட்டினியாய்ப் படுக்கக் கூடாது. முடிந்தவரை கொஞ்சம் பாலும் பழமுமாவது சாப்பிடலாம்; வாருங்கள்.

கூத்தர்:- தேவி! பாலும், பழமும், தேனும் அல்ல! இப்போது நீ அமுதத்தையே கொடுத்தாலும் கூட எனக்கு இனிக்காது. புகழேந்தியின் தமிழமுதம் என் உள்ள மெல்லாம் நிறைந்திருக்கிறது. புலனெல்லாம் குளிர்ந் திருக்கிறது. -