பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

கலைவாணன்


தேவி:- சாப்பிட முடியாவிட்டால், உள்ளேயாவது வரக் கூடாதா? இந்நேரத்தில் இந்தக் காரிருளில், வெளியே உட்கார்ந்திருக்கலாமா?

கூத்தர். தேவி தேவி! என்ன சொன்னாய்? காரிருளில் ஆமாம் கா.ரி.ரு.வி.ல்...காதலி.யை-ஆமாம்; ஆமாம்.

(பாடுகிறார்)

(வெண்பா)

காதலியைக் காரிருளிற் கானகத்திற் கைவிட்ட பாதகனைப் பார்க்கப் படாதென்றோ-நாதம் அளிக்கின்ற ஆழிவா யாங்கலவனோடி ஒளிக்கின்ற தென்னோ வுரை'

தேவி. உங்கள் ஜன்மப் பகைவரென்று எப்போதும் தூற்றிக் கொண்டிருக்கும் புகழேந்தியின் பாடலையா இவ்வளவு புகழுகிறீர்கள்!

கூத்தர்:- ஜன்மப் பகைவன். ஆம் ஆத்திரத்தால் முன் கோபத்தால்-பொறாமையால் கற்றறிந்த உயர்ந்த தமிழ்ப் புதல்வனைப் பகைவனென்று நினைத்தேன். வசை செய்தேன். சிறையிலிட்டு வருந்தினேன். பலர் முன்னி லையில் இழிவு செய்யவும் முயன்றேன். ஆனால், புகழேந்தியின் பொறுமையும் உயர்ந்த புலமையும் என்னை அவருக்கு அடிமையாக்கிவிட்டது. அமுதத் தினும் இனிமை நிறைந்த அவருடைய கவிதைகள் என் உள்ளத்தைக் கவர்ந்துவிட்டன. இதை பகிரங்கமாய் ஒப்புக் கொள்ள என் மனம் பின் வாங்குகிறது. நான்