பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைவாணன்

149


செய்த துரோகங்களுக்கெல்லாம் அவரிடம் மன்னிப்புப் பெறவேண்டுமென்று நினைக்கிறேன். ஆனால் அடுத்த விநாடியே என் கோழைத்தனமும், அகங்காரமும் அதைத் தடுத்துவிடுகின்றன. பேய்க்கும் குரங்குக்கும் ஒப் பிடும் இந்த மனத்தின் விசித்திரமே விசித்திரம்.

புகழேந்தி:- (ஆச்சரியத்துடன் தனக்குள்) என்ன ஆச்சரியம், கூத்தரா இப்படிப் பேசுகிறார்? கூத்தரா என் பாடலைப் பற்றி இவ்வளவு வியந்தும் உயர்த்தியும் பேசுகிறார்? நான் கனவு காண்கிறேனா? அல்லது இடம் தவறி வந்து விட்டேனா?

(சற்று கூர்ந்து பார்க்கிறார்.)

இல்லை இல்லை. சரியான இடம்தான்். கூத்தரேதான்்! என்னைப் புகழ்ந்து பேசுகிறார். ஐயோ! உதட்டில் பகைமையும் உள்ளத்தில் நட்பும் கொண்டுள்ள இந்த உத்தமரையா நான் கொல்லத் தீர்மானித்தேன்.

(பாறாங்கல்லைப் போட்டுவிட்டு வெறி கொண்டவரைப் போல் அலறிக்கொண்டு ஓடிப்போய் கூத்தரைத் தழுவு கிறார்.)

அன்பரே! அன்பரே! என்னை மன்னியுங்கள். தங்கள் உள்ளத்தின் உண்மையறியாது தங்களைக் கொலை செய்ய வந்த இந்தச்சண்டாளனை மன்னித்து விடுங்கள். முன்பின் யோசியாமல் எவ்வளவு பெரிய தீங்கிழைக்க இருந்தேன்?

(திகைப்படைந்த கூத்தர் புகழேந்தியை மார்புறத் தழுவிக்கொள்கிறார்.)