பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

கலைவாணன்


கூத்தர்:- புலவரே! இது என்ன வேடிக்கை? இந்நேரத்தில் இங்கு எப்படி வந்தீர்கள். நான் எதற்காகத் தங்களை மன்னிக்க வேண்டும்?

புகழேந்தி:- கூத்தரே நான் பாவி. தங்கள் உள்ளத்தின் தூய்மையறியாது கொலை செய்ய வந்தேன். கொடியோ னான என்னை மன்னிப்பீர்களா? என்னை மன்னிப்பீர்

களா?

கூத்தர்:- நண்பரே! பதறாதீர். வாருங்கள்; இப்படி

உட்கார்ந்து விஷயத்தை விவரமாகச் சொல்லுங்கள்.

(உள்ளழைத்து மனைகொடுத்து அமரச் ; செய் கிறார்.)

புகழேந்தி:- அன்பரே! இல்வுலகில் இதுவரை நான் யாரையும் பகைவராகக் கருதியதில்லை. தாங்கள் சோழனுக்குப் பெண் கேட்க வந்தபோதும்கூடத் தங்களிடம் எனக்குத் துவேஷம் தோன்றியதில்லை. ஆனால், கம்பரும் ஒளவை யும் மற்றுமுள்ள புலவர்களும் புகழும் என் காவியத்தைத் தாங்கள் இகழ்ந்து தூற்றுவதைக் கண்டு என் உள்ளம் கொதிப்படைந்தது. கவிதையியற்றுவதிலும் காவியம் இயற்றுவதிலும் உள்ள கஷ்டங்களனைத்தும் தெரிந்த ஒரு புலவரே என் கவிதையை இகழ்வதைக் கண்டு என் உள்ளம் வெறி கொண்டது. அறிவு மழுங்கியது. தாங்கள் இருக்கும் வரை நான் நிம்மதியுடன் இருக்க முடியா தென்ற முடிவு தோன்றியது. உடன் உங்களை இன்றிரவு கொன்று தீர்த்து விடுவதென்ற தீர்மானத்திலேயே இந் நேரத்தில் இங்கு தனித்து வந்தேன். இதோ! இதோ