பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைவாணன்

151


பாருங்கள். தாங்கள் உறங்கும்போது தங்கள தலையில் போட்டுக் கொல்வதற்காகக் கொண்டுவந்த பாறாங் கல்லைப் பாருங்கள்!

கூத்தர்!- ஆம் ஆம்; நான் செய்த தீமைகளுக்கு என் தலையில் இப்பாறையைப் போட்டாலென்ன! சித்திரவதைகூடச் செய்யலாம். அதனால் உமக்குப் பாவமே இல்லை.

புகழேந்தி:- நண்பரே! நண்பரே! இனியும் என்னை வதைக் காதீர்கள். தங்கள் மனமார என்னை மன்னித்தே னென்று, ஒரு வார்த்தை சொல்லுங்கள்.

கூத்தர்:- அன்பரே! இதென்ன வேடிக்கை எண்ணற்ற கொடுமைகளைச் செய்த கல்நெஞ்சனாகிய என்னைத் தாங்களல்லவா மன்னிக்க வேண்டும்?

புகழேந்தி:- ஆம். நாம் இருவரும் ஒருவர் உள்ளத்தை ஒரு வருக்குத் திறந்து காட்டிப் பரிசுத்தமாக்கிக் கொண்டு விட்டோம். இனி நாம் உலகில் உள்ளவரை ஒருயிரும் ஈருடலுமாய் ஒன்றுபட்டுத் தமிழ் தாய்க்குத் தளராது தொண்டு செய்வதற்காகவே கலாதேவி தங்கள் தேவி யின் ரூபத்தில் வந்து நம்மைக் கூட்டி வைத்தாள் போலும். சமயத்தில் தங்கள் தேவியார் தங்களை அமுதுண்ண அழைத்திராவிடில் சண்டாளனாகிய நான் தங்கள் தலையில் இக் கல்லைப் போட்டுக் கொன்று கொடிய பாவத்தைத் தேடிக்கொண்டிருப்பேன். தங் களை மரணத்திலிருந்தும் என்னைக் கொலை பாதகத் திலிருந்தும் விடுவித்துத் தம்மையும் வைதவ்யத் திலிருந்து காப்பாற்றிக் கொண்ட தங்கள் தர்மப் பத்தினி மகா உத்தமி! நம் உள்ளத்தின் மாசு நீக்கி மடமையைப்