பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

கலைவாணன்


போக்கி அன்பொளி தேக்கி ஆனந்தமுண்டாக்கிய அருள் தெய்வம் தங்கள் மனைவிதான்். (தேவியை நோக்கி) அன்னையே! பெண்மையின் சக்திதான்் உலகத்தை உண்டாக்குகிறது. இன்பம், எழில், கருணை, சாந்தம், தயை, அன்பு, பொறுமை ஆகியவைகளுக்கெல்லாம் உறைவிடம் தான்் பெண்கள் என்று மறைகள் சொல்லு கின்றன. அதை முதலில் குணவதியிடத்தும், இன்று தங்களிடத்தும் காணுகிறேன். நான் இழைக்க இருந்த மகத்தான் தவறுக்கு என்னை மன்னித்தேனென்று தாங் களாவது ஒரு வார்த்தை சொல்லுங்கள். அப்போது தான்் என் மனம் நிம்மதியடையும். -

தேவி:- ஸ்வாமி எல்லாம் இறைவனின் சித்தப்படி நடை பெறும். நான் அபலை. கல்வியறிவு நிரம்பப் பெறாதவள். தாங்கள் கலைக்கடல். தங்களைப் போன்ற கலைவாணர்களின் நட்பைப் பெற்று என் கணவர் நீண்ட நாள் வாழவும் அவர் அடியிணைகளுக்கு தொண்டு செய்து வாழவும் ஏழையாகிய என்னை ஆசீர்வதியுங்கள். -

புகழேந்தி:- அம்மையே! கற்பின் பூஷணமாகிய தங்களைக்

கடவுள் காப்பாற்றுவார்.

தேவி: ஸ்வாமி! இன்றுதான்் முதன் முதலாக எங்கள் இல்லத்திற்கு வந்திருக்கிறீர்களாகையால், தாங்கள் இன்று எங்கள் இல்லத்திற்கு விருந்தினர், அமுது தயாராயிருக்கிறது. இதோ வட்டிக்கிறேன்; அமருங்கள்.

கூத்தர்:- உள்ளம் ஒன்றுபட்டு அன்பால் பிணிக்கப்பட்ட

பிறகுமா புகழேந்தியை விருந்தாளி என்று சொல்லு கிறாய்? இல்லை. அவர் இனி நம்மில் ஒருவர்.