பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைவாணன்

153


புகழேந்தி- புலவரே! அம்மையார் சொல்வதுதான்் சரி! தங்கள் மூலம் சோழனுக்குப் பெண் கொடுத்த சம்பந்தியல்லவா! நான். எனக்கு விருந்து செய்யக் கடமைப்பட்டவர்கள் தான்ே நீங்கள்?

(இருவரும் சிரிக்கிறார்கள்.)

(இதுவரை இவையனைத்தையும் மறைந்திருந்து கவனித்துக் கொண்டிருந்த குலோத்துங்கனும், உதயணரும் மனம் மகிழ்ந்து முன் வருகின்றனர்.)

குலோத்து, விருந்துக்கு நாங்களும் வந்து விட்டோம். (புகழேந்தியிடம்) மாப்பிள்ளைக்குத் தெரியாமலே சம்பந்தி வீட்டில் திருப்தியாய் விருந்து சாப்பிட்டு விடலாமென்றா நினைத்தீர்கள்? அதுதான்் முடியாது. பார்த்தீர்களா! நீங்கள் அழைக்காமலே விருந்துக்கு நாங்கள் வந்துவிட்டோம்.

(அந்நேரத்தில் அங்கு வந்த அரசனையும் உதயணரையுங் கண்ட மூவரும் திகைத்து நிற்கிறார் கள்.) - கூத்தர்:- அரசே! இதென்ன ஆச்சரியம்! எல்லாம் எதிர் பாராத சம்பவங்களாக வல்லவர் இருக்கிறது. இந்த அகாலத்தில் கால் நடையாக இருளையும் பொருட் படுத்தாமல் இச்சிறு குடிசைக்கு எழுந்தருளியதற்கு......? குலோத் காரணம்தான்ே? அதுதான்் முன்பே சொன்னேனே. புகழேந்திப் புலவருக்குத் தாங்கள் நடத்தும் சம்பந்தி விருந்தில் கலந்துகொள்வதற்குத் தான்் வந்தோமென்று. புகழேந்தி:- இல்லை. நீங்கள் எப்படியோ உளவறிந்து தான்் இங்கு வந்திருக்கவேண்டும். ஆனால், இப்போது அதை மறைக்கிறீர்கள்,