பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

கலைவாணன்


குலோத். இல்லை; இதில் மறைக்காவண்டிய ரகசியம் எதுவுமே இல்லை. கூத்தர் ஆதிமுதல் உங்களுக்கு இடை யூறாயிருந்ததைச் சகியாமல், தாங்கள் கூத்தரைக் கொலை செய்யத்தீர்மானித்துப்புறப்பட்டவரை வேவுக் காரர்களால் அறிந்துதான்் இங்கு வந்தேன். ஆனால், முடிவு வேறு விதமாய் நிகழ்ந்ததைக் கண்டு மகிழ்ச்சி யடைகிறேன். கூத்தர் கொலை செய்யப் படாவிடினும் கூத்தரைக் கொலை செய்ய முயற்சித்த குற்றத்திற்காகத் தங்களை.....!

(புன்சிரிப்புடன் கண்ணைச் சிமிட்டிக் கொள்ளுகிறார்.)

புகழேந்தி:- ஆம் நான் குற்றவாளிதான்். கூத்தரின் உள்ளன்பைக் காண முடியாத உன்மத்தன், கொலை காரன், கொடிய பாவி நான். குற்றம் மன்னிக்க முடியாத குற்றம் தான்். அதற்காக எந்தத் தண்டனை யும் ஏற்றுக்கொள்ளத் தயார். கூத்தர்:- இல்லை; குற்றவாளி தாங்களல்ல; தாங்கள் என்னை ஒரே முறை கொலை செய்ய நினைத்தீர்கள். ஆனால் நான் தங்களை வாழ்க்கையெல்லாம் கொலை செய்தேன். எறும்புக்கும் இன்னல் விளைக்கச் சகியாத தங்கள் உள்ளத்தை சதா புண்படச் செய்தேன். பொறாமையால் அரசரையும் தூண்டித் தங்களைச் சிறையிடச் செய்தேன். ஆகையால், நியாயப்படி தண்டனையடைய வேண்டியவன் நானே.

குலோத். உங்கள் வாக்குமூலத்தின்படி நீங்கள் இருவருமே குற்றவாளிகள்தாம்! ஆகையால் இந்நாட்டு மன்னன் என்ற முறையில் நான் அளிக்கும் தண்டனையை நீங்கள் இருவரும் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்். (சிரித்து கண்களைச் சிமிட்டி) என்ன உதயணரே! -