பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைவாணன்

155


உதயனர்:- (புன்சிரிப்புடன்) ஆமாம்; அரசர் ஆக்ஞையை

மீற முடியுமா? குற்றவாளிகள் தண்டனைக்குக் கட்டுப்

பட்டுத் தான்ே ஆகவேண்டும். ஆனால்...! தண்டனை என்னவென்பது தெரியவேண்டாமா? και

குலோத்:- தண்டனையா! அவர்கள் இருவரும் பரஸ்பரம் ஒருவர் மனச்சிறையில் மற்றவர் வாழ்க்கை யெல்லாம் அடைப்பட்டிருக்க வேண்டும்.

(புலவர்கள் இருவரும் ஆச்சரியத்தோடு அரசனைப் பார்க்கிறார்கள்.)

உதய்னர்:- (சிரித்து) இதுதான்் தங்கள் தண்டனையா?

குலோத்:- இல்லை; இன்னுமொரு தண்டனையும் இருக்கிறது அவர்கள் இருவரும் சேர்ந்து, உயிருள்ளவரை என்மனச் சிறையிலும் அடைபட்டிருக்க வேண்டும்.

(புலவர்கள் இருவரும் ஆச்சரியமுறுகின்றனர்.)

இரு புலவரும்:- வேந்தே! என்ன மனச்சிறை?

(மகிழ்ச்சி மிகுதியால் கூத்தரும் புகழேந்தியும் அரசரைத் தழுவுகின்றனர். அன்பின் பெருமையை வியந்து எல்லோரும் பாடுகின்றனர்.) -

புகழேந்தி:- இந்த மகிழ்ச்சி என்றும் நம்மிடையே நிலவ

இறைவன் அருள்புரிய வேண்டும்.

முற்றுப்பெற்றது.