பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6வாழிய செந்தமிழ்!

கலைவாணன்

காட்சி-1. இடம்:மதுரையிலுள்ள் ஒரு முக்கிய வீதி. காலம்:-மாலை.

(புலவர்களும் பொதுமக்களும், புகழேந்திப் புலவரின் வருகை யைக் குறித்து மகிழ்ச்சியோடு பேசிக் கொள்ளுகிறார்கள்.)

1 வது புலவர்:- என்னையா விஷயம்! எல்லோரும் ஏகக்

குதுகலத்துடன் கிளம்பிவிட்டீர் போலிருக்கிறதே!

2 வது புலவர்: ஆமாம். குதுகலப்படவேண்டிய நாள் தான்் இது. புகழேந்திப் புலவரைப் போன்ற ஒப்பற்ற பெரியார்களைத் தரிசிக்கும் நாள் நமக்கெல்லாம் திருநாளல்லவா?

3 வது புலவர். தடையென்ன! இனி நம்பாடு வேட்டைதான்். கொஞ்ச நாளைக்கு இலக்கிய விருந்துக்குப் பஞ்சமே இல்லை.

1 வது புலவர். ஏனையா! இவர் எந்த ஊர், என்ன இனத் தைச் சேர்ந்தவர் என்ற விபரம் ஏதேனும் உங்களுக்குத் தெரியுமா? -

2 வது புலவர்: படித்தவர் எந்த இனத்தைச் சேர்ந்தவரா யிருந்தாலென்ன ஐயா? இங்கே கூடவா உமது சமய வாதத்தைக் கிளப்ப வேண்டும். க-2 -