பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

கலைவாணன்


1 வது புலவர்:- வாதம் ஒன்றும் இல்லை ஐயா, உண்மையிலேயே எனக்கு அவரைப் பற்றிய விவரம் ஒன்றும் தெரியாது. அதனால்தான் கேட்டேன்.

2 வது புலவர்:- ஐயா! அவர் தொண்டைமண்டலத்திலே பொன்விளைந்த களத்தூரிலே துளுவ வேளாளர் குலத்திலே பிறந்தவர். போதுமா?

3 வது புலவர்:- எல்லோரும் அவரைப்பற்றி இவ்வளவு பெருமைப்படுத்திப் பேசுகிறீர்களே! அவர் கவியிலே அப்படியென்ன தனி உயர்வு இருக்கிறது? குறிப்பிடத்தக்க நூல்கூட எதுவும் இயற்றியிருப்பதாகத் தெரியவில்லையே?

3 வது புலவர்:- எதைக் கேட்டாலும் எதைப் பார்த்தாலும் சந்தேகம்தான்ா! ஏனையா, உமது வாழ்க்கையில் சந்தேகமில்லாமல் ஒரு பாட்டாவது எழுதிப் பூர்த்தி செய்ததுண்டா? சேச்சே! புலவனுக்கு இப்படி எடுத்ததற் கெல்லாம் சந்தேக முண்டானால் எப்படி முன்னுக்கு வரமுடியும்?

2 வது புலவர்:- ஐயோ பாவம்! அது அவர் பிறவிக்குணம். அது போகட்டும். நேரம் ஆகிவிட்டது. வாருங்கள்: போகலாம்; தமிழ்ச் சங்கத்திற்கு.

(புறப்படுகிறார்கள். எதிரில் விகடகவி வருகிறார்.)

விகடகவி:- எங்கே! எங்கே! தமிழ்ச் சங்கத்திற்கா?

எல்லோரும்:- ஆமாம்.

விகடகவி:- ஏன்? அங்கென்ன விசேஷம்?

1 வது புலவர்:- ஓகோ! உமக்கு விஷயம் தெரியாதோ?”