பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலைவாணன்

19


விகடகவி:- தெரியாதே. சொன்னால்தானே தெரியும்.

2 வது புலவர்:- அவருக்கா விஷயம் தெரியாமல் இருக்கும்? அரண்மனை விகடகவியல்லவா! அப்படியே கொஞ்சம் புரளி செய்து பார்க்கிறார்.

விகடகவி:- சிவசிவா! அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. உண்மையிலேயே “நீங்கள்” தமிழ்ச் சங்கத்திற்குப் போவது எனக்குப் புரியவே இல்லை.

3 வது புலவர்:- இன்று தமிழ்ச் சங்கத்திற்குப் புகழேந்திப் புலவர் வருவது உமக்குத் தெரியாதா?

விகடகவி:- ஓஹோ! அங்கே வேடிக்கை பார்க்கப் போகிறீர்களோ அதுதானே நானும் யோசித்தேன். தமிழ்ப் பள்ளிக்கூடத்திற்குப் போக வேண்டிய நீங்கள்கூட தமிழ்ச்சங்கத்திற்குப் போவதென்றால், ஆச்சரியப்படாமல் இருக்க முடியுமா? உம். அப்படியானால் நானும் வருகிறேன். வாருங்கள் போகலாம்.

(எல்லோரும் போகிறார்கள்.)

[திரை]