பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காட்சி - 2.

இடம்:-மதுரைத் தமிழ்ச்சங்கம். காலம்:-மாலை.

(தமிழ்ச் சங்கத்தில், புலவர்களும் பொதுமக்களும் திரளாகக் கூடி இருக்கின்றனர். புலவர்கள் மத்தியில் புகழேந்தி நடுநாயகமாய் அமர்ந்திருக்கிறார். அரசர் ஒருபுறம் அமர்ந்திருக்கின்றார். “வாழ்க!புகழேந்தி. வாழ்க புகழேந்தி” என்று எல்லோரும் ஆரவாரிக்கின்றனர். அமைச்சர் எழுந்து கையமர்த்துகிறார்.)

அமைச்சர்:- வாழ்க தமிழ்நாடு

எல்லோரும்:- வாழ்க!

அமைச்சர்:- வாழ்க தமிழ் வேந்து!

எல்லோரும்:- வாழ்க!

அமைச்சர்:- வாழ்க செந்தமிழ்ப் புலவர்கள்!

எல்லோரும்:- வாழ்க! (அமைச்சர் அமருகிறார்).

பாண்டியன்:- புலவர் சிகாமணியே! வருக! வருக! செந்தமிழ்ப் புலவராகிய தம் வருகையால் யானும் எந் நாட்டு மக்களும் அளவற்ற மகிழ்ச்சியடைந்தோம். தம் போன்ற ஒப்பற்ற புலவர்களின் ஒத்துழைப்பினாலேயே இத்தமிழ்ச் சங்கமும் என் ஆட்சியும் வளம் பொருந்திய இன்பம் நிறைந்ததாக இன்றும் திகழ்கிறது. இன்னும் எண்ணற்ற புலவர்கள் தோன்றவும் தமிழ் வளமும் தமிழ்ச் சங்க வளமும் பெருகவும் இத்தகைய அரும் புலவர்கள் பலர் தோன்றித் தமிழ்க் கலை விளக்கைத் தூண்டாமணி விளக்காய்ச் செய்ய வேண்டு மென்பதே என் பேரவா. என் ஆசை நிறைவேற புலவர் மணி அரிய