பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலைவாணன்

21

யோசனைகள் பலவும் சொல்வதோடு ஆக்க வேலைகளிலும் பெரும்பங்கெடுத்துக் கொள்வாரென நினைக்கின்றேன்.

(அமைச்சர் மலர்மாலையை அரசரிடம் கொடுக்கிறார். அரசர் அதைப் புகழேந்திக்குச் சூட்டுகிறார். புகழேந்தி வணக்கத்துடன் மாலையைப் பெற்றுச் சூடி வணங்குகிறார்.)

புகழேந்தி:- தமிழ்த் தாய்க்கும், தமிழ்ப் புலவர்களுக்கும், தமிழ் மன்னருக்கும் தமிழர்களாகிய உங்கள் அனைவருக் கும் என் வணக்கம். தமிழ் மன்னரின் வேண்டுகோளைத் தமிழ்த் தாயின் கட்டளையாக ஏற்றுக் கொண்டேன். பண்டைப் பெருமைமிக்க இத்தமிழ்ச் சங்கத்தைத் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்த இந்த நாளே என் வாழ் நாளில் கிடைத்தற்கரிய திருநாளாக நினைத்து மகிழ்ச்சி யடைகிறேன்.

அகத்தியரும், முருகவேளும், முடிநாகராயரும், நிதியின் கிழவனாருமாகிய 549 பேர்களால் கூட்டப் பெற்று, காய்ச்சின வழுதிமுதல் கடுங்கோன் வரை 89 மன்னர்களால் 4440 ஆண்டுகள் ஆதரித்து வளர்க்கப் பெற்று, பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியா விரை முதலிய அருமையான பாடல்களை இயற்றிப் பொலியுங்கால், கடல்கொண்ட முதற் சங்கமும். பின்பு,

அகத்தியர், தொல்காப்பியர், திரையன் மாறன், கீரந்தையார் முதலிய 59 அறிஞர்கள் போற்ற 3700 புலவர்கள் பாட வெண்டேர்ச் செழியன் முதல், மூடத் திருமாறன் வரை 59 அரசர்களால் 3700 ஆண்டுகள் தாங்கப் பெற்று, அகத்தியம், தொல்காப்பியம், இசை துணுக்கம் முதலிய அரும்பெரும் நூல்களால் பெருமை